image description
# 333311
USD 5.75 (No Stock)

கண் என்றது இயற்கை=Kāṇ Eṇratu Iyarkai

Author :  எஸ். ராமகிருஷ்ணன்= Es. Rāmakiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
தேசாந்திரி பதிப்பகம்=Tēcāntiri Patippakam, சென்னை=Chennai
ISBN 9789387484115
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 127 p. ; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு “ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.” ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்....ஓடத்தை சற்றே ஒரு முளையில் கட்டிப் போட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். ஓடம் கரையோரம் அலையாடிக் கொண்டிருக்கிறது.... ராமகிருஷ்ணின் நதி போன்ற கட்டுரை அல்லது கதை அல்லது அது என்ன படைப்பானாலும் அதன் ஆற்றொழுக்கான வரிகளில் ஓடமென நீந்திக் களிக்கும் போது, அபூர்வமான ஒரு வரி நம்மை இப்படிக் கரையில் கட்டிப் போட்டு விடும். அவர் ஓடக்காரனென ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்..... இப்படிப் படைப்பின் இடையே வரிகள் நம்மைக் கட்டிப் போடுவதுதான் படைப்பாளியின் வெற்றி.

Product added to Cart
Copied