image description
# 333334
USD 23.00 (No Stock)

வேனல்=vēṇal

Author :  கலாப்ரியா=kalāpriyā

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
ISBN 9789387499188
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 486 p. ; 22 cm.
Product Weight 600 gms.
Shipping Charges(USD)

Product Description

ஆனித் தேரோட்டம் கொடியேறிட்டுல்லா, தேரோட்டம் வரதுக்குள்ள இந்த வேனல்ப்பந்தலையெல்லாம் பிரிச்சு வச்சிர வேண்டாமா முதலாளி, எங்கன அடுக்க,வீட்டுப் பொறவாசல்ல கொண்டு போய் போட்றட்டுமா,இல்லேன்னா இங்கய மேல தட்டட்டில ஏத்திருவோமா,’ லச்சுமணன் கேட்டுக் கொண்டிருந்தான், ரெண்டாம் திருநாளுக்கான காலைச் சப்பரம் கோயில் ‘கொடர வாசலை’ விட்டுக் கிளம்பிய வேட்டுச் சத்தம் மேல ரத வீதிக்குக் கேட்ட போது.” வேய் வெங்கு இன்னக்கி என்னவே, கர்ப்பக மரமும் வெள்ளித் தாமரையுமாவே,என்ன சப்பரம் வே.. வேய், வெங்கு என்னவே, ரதவீதியில எவ வே போறா, கோயிலுக்குப் போறவுகளைப் பார்க்கும் மும்முரத்தில இருக்கேரா....இல்லை பிடில் வாசிப்பா, வேய் வெங்கு, வெங்க மட்டை...உம்மத் தாம்வே இன்னக்கி என்ன சப்பரம்.. சப்பரம் வரும்போது உடைக்க தேங்கா பழம் வேங்கி வச்சேரா...” என்று கடைமுன்னால் நிற்கும் லச்சுமணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே கடை கணக்குப் பிள்ளையிடமும் பேசினார், ‘முதலாளி’ தெய்வநாயகம்.

Product added to Cart
Copied