image description
# 333371
USD 7.00 (No Stock)

பதினெட்டாம் பெருக்கு=Patiṇeṭṭām perukku

Author :  ந. பிச்சமூர்த்தி=na. piccamūrtti

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 152 p. ; 22 cm.
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

‘மணிக்கொடி’ எழுத்தாளரான ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பதினெட்டாம் பெருக்கு’. 1944இல் ஹிமாலயப் பிரசுரம் வெளியிட்ட இத்தொகுப்பு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் சி.சு. செல்லப்பாவால் இரண்டாம் பதிப்பாக ‘எழுத்து பிரசுரம்’ மூலம் வெளியிடப்பட்டது. புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படும் ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் பல தலை முறைகளைக் கடந்தும் வாசகர்களை வசீகரிக்கும் தனித்துவமிக்க படைப்புகளாக நிலைபெற்றுள்ளன. தத்துவ மனநிலை கொண்ட பிச்சமூர்த்தியின் இக்கதைகளில் மனித மனத்தின் சஞ்சலங்களும் சபலங்களும் போராட்டங்களும் கவித்துவமாகப் பதிவாகியுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முள்ளும் ரோஜாவும் என்னும் சிறுகதை 1933இல் கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இருந்தும் கூட்டம் சேர்க்காமலும் கூச்சல் போடாமலும் தனித்திருக்கும் மனநிலையோடு பறவைகளை நேசிக்கும் மனிதராக வாழ்ந்து வந்திருக்கிறார் பிச்சமூர்த்தி. காவிரி கரைபுரண்டு ஓடிய நாட்களில் எழுதப் பட்ட கதை ‘பதினெட்டம் பெருக்கு’. இன்று காவிரி வறண்டு கிடக்கிறது. ஆனால் பதினெட்டாம் பெருக்கு கதையில் பெருக்கெடுக்கும் மனித உணர்வுகள் எக்காலத்திலும் அப்படியே நிலைத்து நிற்கும்.

Product added to Cart
Copied