‘கிருதயுகம் எழுக (பாரதியின் தேசிய சமூகச்சிந்தனைகள்) = ‘Kirutayukam Eluka (Pāratiyiṇ Tēciya camūkaccintaṇaikaḷ)

Author :  பா. சிவானந்தவல்லி = Pā. Civāṇantavalli

Product Details

Country
India
Publisher
Pārati Puttakālayam, Chennai.
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 208p. ; ills. 23 cm.
Product Weight 360 gms.
Shipping Charges(USD)

Product Description

Bharathiyar thoughts & Society= பாரதியின் தேசிய சமூகத்சிந்தனைகள் பாரதி ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் உச்சம் தொட்ட போதிலும் ஆராய்ச்சிக்கான பல தளங்கள் இன்னும் தொடப்படவில்லை என்பதை பாரதி ஆய்வுலகம் நன்கறியும். பாரதியார் எழுத்துக்கள் ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும் ஆய்வுப்பொருளாக இருக்க ஒரு முக்கியமான காரணம் தன் காலத்தில் நடைபெற்ற அனைத்து தேசிய சமூக நிகழ்வுகளை உற்று நோக்கி அவற்றினை வரலாற்றோடு பொருத்தி கூறி வரலாற்று நிகழ்வுகளனைத்தையும் கவனித்து வரலாற்று நோக்குடன் அணுகியதே ஆகும். தேசியச்சூழலிலும், சமூக நிலைகளிலும் அவர் காலத்தில் நினைக்க முடியாமல் இருந்த தீர்வுகளை, இன்றும்கூட முழுமையாக செயல்படுத்த முடியாத தீர்வுகளை அன்றே உறுதிபடக் கூறியதுடன் நின்று விடாமல் அதனை செயல்படுத்தவும் செய்தார்.பாரதியார் வாய்ச்சொல்லில் வீரராக மட்டும் இல்லாமல் செயல் வீரராகவும் திகழ்ந்ததே அவர் எழுத்துக்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் நிலைத்து நிற்கக் காரணம்.

Product added to Cart
Copied