image description
# 781253
USD 8.75 (Book in Stock, will be dispatched ASAP)
- +

சில ஆசிரியர்கள் சில நூல்கள் = Cila āciriyarkaḷ Cila Nūlkaḷ

Author :  அசோகமித்திரன் = Acōkamittiraṇ

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, nākarkōvil
ISBN 9789391093327
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 144p.; 22 cm.
Categories Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Releases | புது வரவுகள்
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். தான் வாசித்த ஒரு நூலை முன்வைத்துத் தன்னுடைய இலக்கிய மேதமையைப் பறைசாற்றிக்கொள்ளும் போக்கு மதிப்புப் பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில் நூலை முன்னிறுத்திப் பேசும் அசோகமித்திரனின் கட்டுரைகள் பெரும் ஆறுதல் அளிக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் நூல்களை அசோகமித்திரன் அறிமுகப்படுத்துகிறார். படைப்புகளைக் காலத்தின் பின்னணியில் பொருத்திக்காட்டுகிறார். சிறப்புகளை மிகையின்றிச் சொல்கிறார். போதாமைகளைக் கூடியவரை நுட்பமாகச் சொல்லும் அசோகமித்திரன், ஒரு சில இடங்களில் வெளிப்படையாகச் சொல்லும்போதும் காரமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. எந்த ஒரு நூலைப் பற்றியும் ஒவ்வொருவரும் தன்னுடைய வாசிப்பின் மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்று நம்பும் அசோகமித்திரன் தன் வாசிப்பின் முடிவுகளை வாசகர்களிடத்தில் திணிக்காமல் நூல்களைப் பற்றிப் பேசுகிறார். எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் கலாபூர்வமான, கச்சிதமான சொற்சித்திரங்களாக உருப்பெற்றிருக்கின்றன. பல சித்திரங்கள் சிறுகதைக்கு இணையாக உள்ளன. படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகளைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் படைப்பைப் பற்றிய தன் பார்வையையும் இயல்பாக அதில் இணைத்துவிடுகிறார். எளிய கோடுகளால் ஆன இந்தச் சித்திரங்கள் அழிக்க முடியாமல் மனத்தில் பதிந்துவிடக்கூடியவை.

Product added to Cart
Copied