Country | |
Publisher | |
ISBN | 9789391748845 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 1189p.; 23 cm. |
Product Weight | 1320 gms. |
Shipping Charges(USD) |
Novel மிளகு நாவலில் இருந்து இரு சிறு பகுதிகள் சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது. பெத்ரோ அமர்ந்து சொன்னார் – சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி கோவா செயலகம் மூலமாக உத்தரவு வந்திருக்கிறது. போர் நின்றதும் திரும்ப அனுமதி உண்டு. தெரியும் பெத்ரோ. ஆனால் நீங்கள் வரப் போவதில்லை. லிஸ்பனுக்குக் குடும்பத்தோடு திரும்பிவிடுவீர்கள். பெத்ரோ தலைகுனிந்து சென்னபைரதேவி காலில் விழுந்து இந்துஸ்தானி பாரம்பரியத்தின் படி சர்வாங்கமும் நிலம் தொட வணங்கி எழுந்தார். ஆயுஷ்மான் பவ. ஜெயவிஜயிபவ. முன்கூட்டிய ஆசிர்வாதங்கள் என்றாள் மகாராணி. பெத்ரோ கைகூப்ப அவள் சொன்னாள் – முன்கூட்டியே போர்த்துகல் படைக்கு ஊதியம் அதுவும் மிளகாகத் தரவேண்டும். அதை நீங்கள் தரச்சொல்லி கேட்கவில்லையே. போகிறது. நாளை நஞ்சுண்டார் படை எண்ணிக்கை, தகுதி சரி பார்த்து அளிப்பார்.