இரண்டாம் இதயம் = Iraṇṭām Itayam

Author :  மாதவராஜ் = Mātavarāj

Product Details

Country
India
Publisher
பாரதி புத்தகாலயம், சென்னை = Pārati Puttakālayam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 160p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel பூவரச மரங்களும், வேப்ப மரங்களும், வாடாச்சி மரங்களுமான தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வாசல் தெளிக்கும் தாவணிப் பெண்ணை அளந்து செல்கிறேன். டைரியில் அண்ணன் எழுதிய கவிதைகளைப் படித்து, நானும் எழுதிப் பார்க்கிறேன். வெயில் தகதகக்கும் தருவைக்காட்டில் மதியச் சாப்பாட்டை மறந்து, விக்னேஷ்வரன் போட்ட பந்தை ஏறியடிக்க முயன்று, ஏமாந்து ஸ்டம்ப் அவுட்டாகிப் போகிறேன். மூங்கில் தட்டியடைத்த வராண்டாவில் உட்கார்ந்து ரஞ்சன் புல்புல்தாரா வாசிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். “பெரியவர்களுக்கு அப்படி வருமாம்” என நண்பர்கள் சொல்ல, மொட்டை மாடியின் இருட்டில் போய் முயற்சித்து முயற்சித்து தண்டுவடத்தில் சுண்டிய வலியில் விம்மியும், பயந்தும் அப்புறம் அடங்கியும் போகிறேன். நகைகளை ஒவ்வொன்றாய் எங்கள் படிப்புக்காக கனரா வங்கியில் வைத்துவிட்டு கவரிங் நகைகளோடு வலம் வரும் அம்மாவைத் திடுமென அணைத்து கண்கள் மல்க விலகுகிறேன். ஒருமுறை கணக்கில் நூறுமார்க் வாங்காமல் 98 வாங்கியதற்காக அழுகிறேன். முதன்முறையாக தனிப்பைனி இரண்டு மூன்று சொக்குகள் அடித்துவிட்டு தலைக் கிறுகிறுத்து பனைமரத் திரட்டில் நின்று சத்தம் போட்டு சிரிக்கிறேன். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ முக்காணி ரைஸ்மில்லில் இருந்து அப்பா வரும் இரவில், அம்மாவைத் தவிர வீடே உட்கார்ந்து ரம்மி விளையாட, அம்மா நடுவில் வைக்கும் அச்சுமுறுக்கை வேகமாக ஆளுக்கு முதலில் எடுக்கிறேன். நூலகம் சென்று குமுதம், ஆனந்தவிகடன், கல்கியில் வரும் அத்தனை சுஜாதா தொடர்கதைகளைப் படிக்கிறேன். அதில் வரும் ஜெயராஜ் படங்களின் பெண்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே...”, “செந்துராப் பூவே செந்தூரப்பூவே, சில்லென்ற காற்றே..”, “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” பாடல்களில் காற்றாக கரைகிறேன். இதுதான் பதின்மப்பருவத்தில் நான்.

Product added to Cart
Copied