ஆனந்தவல்லி = āṇantavalli

Author :  லக்ஷ்மி பாலகிருஷ்ணன் = Lakśmi Pālakiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
பாரதி புத்தகாலயம், சென்னை = Pārati Puttakālayam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 248p.; 22 cm.
Product Weight 380 gms.
Shipping Charges(USD)

Product Description

History in Fictional Format தஞ்சையைக் கடைசியாக ஆண்ட மன்னர் பரம்பரை என்றால் அது மராட்டியர்கள்தான். அரபிக்கடலோரம் இருந்தவர்கள் தஞ்சைத் தரணியின் அதிபதிகளானது ஒரு அதிசயம் என்றால், அவர்களும் இந்த மண்ணுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது மற்றோர் அதிசயம். மராட்டிய மன்னர்கள் அனைவருமே மராட்டியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது போலவே தமிழிலும் தெலுங்கிலும் கூட புலமை பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் தஞ்சைப் பெரிய கோவிலின் அறங்காவலர்கள் அந்தப் பரம்பரையினர்தான். தஞ்சையின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான ராஜா மிராசுதார் மருத்துவமனை இருக்கும் இடம் ஒரு காலத்தில் ராணி தோட்டம் என்ற பெயரில் காமாட்சியம்பா பாயி என்ற அரசிக்கு சொந்தமானதாக இருந்தது. தஞ்சை மராட்டிய வம்சத்தின் கடைசி அரசராக இருந்த சிவாஜியின் பட்டத்தரசியான அப்பெண்மணி மருத்துவமனை அமைக்க தனது தோட்டத்தையும் அளித்து, நன்கொடையும் தந்தார். இப்படியாக தஞ்சைக்குள்ளும், வெளியேயும் பல்வேறு நலப் பணிகள், கோவில்கள், சத்திரங்கள் என மராட்டிய அரச வம்சத்தினரின் கொடையாக நீடித்து நிற்கும் நற்செயல்கள் பல உண்டு.

Product added to Cart
Copied